தமிழ்நாடு

மங்கள நாட்களில் கூடுதல் கட்டணம்: அதிர்ச்சி தந்த பத்திர பதிவுத்துறை!

Published

on

மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் என பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மங்களகரமான நாட்களான சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பத்திர பதிவு அலுவலகம் திறந்து வைக்க உத்தரவு பிறப்பித்து பத்திரம் துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்த நாட்களில் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14, ஆடிப்பெருக்கு நாளான ஆகஸ்ட் 87 மற்றும் தைப்பூசம் நாளான ஜனவரி 18 ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலர்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மங்களகரமான நாட்களில் அதிக அளவு பத்திரப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பத்திரபதிவுத்துறையின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version