கிரிக்கெட்

பெண்கள் ஐபிஎல்.. அதானி, அம்பானி ஏலம் எடுத்த அணிகள் எவை எவை? முழு விபரங்கள்

Published

on

இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இன்று பெண்கள் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என்றும் இந்த அணிகளை ஏலம் எடுக்க முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் அதானி, அம்பானி உள்பட முக்கிய தொழில் அதிபர்கள் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஏலம் எடுத்துள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

சற்றுமுன் வெளியான தகவலின்படி, அகமதாபாத் அணியை அதானி குழுமம் ஏலம் எடுத்துள்ளது. ரூபாய் 1289 கோடிக்கு அதானி குடும்பம் அகமதாபாத் அணியை ஏலம் எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் மும்பை அணியை ரிலையன்ஸ் குழுமம் ஏலம் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பெண்கள் ஐபிஎல் ஐந்து அணிகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள் மற்றும் ஏலத்தொகை குறித்த தகவல் இதோ:

1. அதானி ஸ்போர்ட்ஸ் பிரைவைட் லிமிடேட்: அகமதாபாத் அணி – ரூ.1289 கோடி

2. இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவைட் லிமிடேட்: மும்பை அணி – ரூ.912.99 கோடி

3. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவைட் லிமிடேட்: பெங்களூரு அணி – ரூ.901 கோடி

4. JSW GMR கிரிக்கெட் பிரைவைட் லிமிடேட்: டெல்லி அணி – ரூ.810 கோடி

5. கேப்ரி குளோபல் ஹோல்டிங் பிரைவைட் லிமிடேட்: லக்னோ அணி – ரூ.757 கோடி

2023ஆம் ஆண்டின் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 10 நகரங்கள் விபரங்கள்

பெண்கள் ஐபிஎல் 2023க்கு 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன

1. அகமதாபாத்

2. கொல்கத்தா

3. சென்னை

4. பெங்களூரு

5. டெல்லி

6. தர்மசாலா

7. கவுகாத்தி

8. இந்தூர்

9. லக்னோ

10. மும்பை

பெண்கள் ஐபிஎல் அணிகளின் ஒருங்கிணைந்த ஏல மதிப்பீடு 4669.99 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 4000 கோடி ரூபாய் ஏலத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ஏலத்தொகை கிடைத்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version