இந்தியா

ஹிண்டர்பர்க் அறிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை.. முழுமையாக விண்ணப்பத்தை பெற்ற அதானி எஃப்பிஓ!

Published

on

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற அமைப்பு அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தின. இந்த நிலையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்பிஓ முழுமையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் அதானி நிறுவனத்துக்கு ஹிண்டர்பர்க் அறிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் அதானி நிறுவனங்களின் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் காரணமாக பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. அதானி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 20 முதல் 25 சதவீதம் சரிந்த நிலையில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிதியினை திரட்ட அதானி நிறுவனம் எஃப்பிஓ வெளியிட திட்டமிட்டு வெளியிட்டது.

சரியாக ஹீண்டர்பேக் நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்த இரண்டாவது நாளில் இந்த எஃப்பிஓ வெளியான நிலையில் ஹிண்டர்பெர்க் அறிக்கையால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழுமையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதானி குழுமத்தின் எஃப்பிஓ 1.1 மடங்கு அதிகமாக விண்ணப்பத்தை பெற்றுள்ளதாகவும் ஹிண்டர்பெர்க் அறிக்கையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை பட்ஜெட் வெளியாகும் நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மீண்டும் ஏற்றத்தில் இருக்கும் என்றும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதானி எஃப்பிஓ தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து 1.26 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளதாகவும், முதலீட்டாளர்களிடம் இருந்து 3.26% பங்கும், ஊழியர்கள் தரப்பில் 52% விண்ணப்பமும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 11% விண்ணப்பத்தினையும் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

3112 – 3276 ரூபாய் என அதானி எஃப்பிஓ விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து சிறிதளவு குறைந்தாலும் விரைவில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version