இந்தியா

1050 கோடியில் சுவிட்சர்லாந்து சிமெண்ட் நிறுவனத்தை வாங்கும் அதானி!

Published

on

சுவிட்சர்லாந்து நாட்டின் சிமெண்ட் நிறுவனங்களை 1,050 கோடி கொடுத்து பிரபல தொழிலதிபர் அதானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் அதானி என்பதும் இவர் ஆசியாவிலேயே நம்பர்-1 தொழில் அதிபராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இவர் அம்பானியை முந்தி விட்ட நிலையில் இவரது சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் போல் ஹோல்சிம் என்ற நிறுவனத்தின் இந்திய பிரிவை 1,050 கோடி டாலர் கொடுத்து அதானி வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தான் அம்புஜா, ஏசிசி ஆகிய இரண்டு சிமெண்ட் நிறுவனங்களாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தை அதானி வாங்குவது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நிறுவனமாக அதானி சிமெண்ட்ஸ் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version