இந்தியா

நிர்மலா சீதாராமனின் ‘அந்த அறிவிப்பு’- “அதானி, அதானி” என கோஷம் போட்ட எதிர்க்கட்சிகள்!- பட்ஜெட் கலகல

Published

on

இன்றைய மத்திய பட்ஜெட் 2021 தாக்கலின் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் முதலீடுகள் குறித்துப் பேசினார். அப்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.

“பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3.எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்க திட்டம். 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் – அரசு கூட்டுப் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். பல துறைகளில் தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெற முடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு அவசியம்” என்று நிதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

‘அதானி, அதானி’ என முழக்கமிட்டார்கள். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதே மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மோடி, மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், அதானி குழுமம் மின்னல் வேகத்தில் வளர்ந்தது. குறிப்பாக நாட்டில் உள்ள பல துறைமுகங்கள் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றன. இதை மனதில் வைத்துதான் மத்திய அரசு, ‘துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு’ என்ற அறிவிப்பை வெளியிட்டதாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version