சினிமா செய்திகள்

அடங்கமறு 2வது டெலிடட் சீன் ரிலீஸ்!

Published

on

ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த டிசம்பர் 21ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் அடங்கமறு. இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது யூடியூபில் ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது.

முதலாவதாக ரிலீஸ் செய்யப்பட்ட டெலிடட் சீனில், பொதுமக்களின் கோப்புகளை காவல் துறை கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டெலிடட் சீனில், போலீஸ்காரரின் மகளுக்கு வேலை ரீதியாக உத்தரவு போட்ட உயர் அதிகாரியை, கஞ்சா கடத்தல்காரனாகா போலீசாரே திட்டமிட்டு சதி செய்து, அவனை எச்சரிக்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

போலீசாரின் பக்க அநியாயங்களை அப்பட்டமாக சொல்வதால் தான் என்னமோ கடைசியில் படத்திலிருந்து இந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version