சினிமா செய்திகள்

பெண்கள் மீது குடும்ப வன்முறையா? வரலட்சுமி சரத்குமார் வழங்கிய யோசனை!

Published

on

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீது நடைபெற்று வரும் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் யோசனை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “இது பெண்களுக்கான முக்கிய விஷயம். பல பெண்கள் ஊரடங்கின் போது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அப்படி குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க முடியாமல் உள்ள பெண்களுக்கு, 1800 102 7282 என்ற உதவி எண் உள்ளது.

இந்த இலவச எண்ணிற்குப் பெண்கள் அழைக்கும் போது குடும்ப வன்முறைக்கு எதிரான உதவிகள் கிடைக்கும். இந்த உதவி எண்ணை உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கு எல்லாம் கொடுங்கள். ஒருவேளை எந்த பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு வந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பிறருக்கு இந்த உதவி எண்ணை அளிக்கும் போது தயவு செய்து தனிமையில் கொடுங்கள், அவர்களின் குழந்தைகள் இருந்தால் அதனால், இந்த தவல்கள் வெளியில் கசிந்து பிரச்சினையாக வாய்ப்புள்ளது.

குடும்ப வன்முறை என்பது செல்வாக்கு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று பாகுபாட்டுடன் நடைபெறுவது அல்ல. யாருக்கு வேண்டுமானாலும் நடைபெறும் ஒன்று. தயவு செய்து இந்த எண்ணைப் பகிருங்கள். உதவி கண்டிப்பாகக் கிடைக்கும்.” என்று வரலட்சுமி சரத்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version