சினிமா

நடிகை தமன்னாவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் அவரது குடும்பம்!

Published

on

நடிகை தமன்னா 15 வயது சிறுமியாக இருக்கும் போது கடந்த 2005-ஆம் ஆண்டு சாண்ட் சா ரோஷன் செஹெரா என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் 14 ஆண்டுகளாக நடித்து வரும் முன்னணி நடிகையான தமன்னாவுக்கு தற்போது அவரது வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர்.

தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. காரணம் தமன்னா அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலிப்பதாக ஒரு செய்தி கடந்த வருடம் உலா வந்தது.

இந்நிலையில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமன்னா, ஒரு நாள் நடிகர் என செய்திகள் வருகின்றது, அடுத்த நாள் கிரிக்கெட் வீரர், தற்போது மருத்துவர். காதல் மீதும் காதலிக்கப்படுவதன் மீதும் எனக்கும் விருப்பம் இருக்கின்றது. ஆனால், அதற்காக எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வரும் ஆதாரமற்ற செய்திகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

மேலும், இப்போது வரை நான் மகிழ்ச்சியான சிங்கிளாகத்தான் இருக்கிறேன். எனது வீட்டில் தீவிரமாக தற்போது மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். அப்பொறுப்பை அவர்களிடமே விட்டுள்ளேன் என தமன்னா கூறியுள்ளார். விரைவில் தமன்னாவின் திருமண ஏற்பாடுகள் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version