சினிமா செய்திகள்

இயக்குனராக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா: ஆரம்பமே ஹன்சிகா தான்!

Published

on

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகை சுஜிதா தற்போது இயக்குனராக மாறியிருக்கும் நிலையில் அவரது முதல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் சுஜிதாவின் கணவர் தனுஷ் ஒரு விளம்பர பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தனது கணவரின் மேற்பார்வையில் நடிகை சுஜிதா ஒரு விளம்பர படத்தை இயக்கியுள்ளார்.

இந்த விளம்பரப் படத்தில் நடிகை ஹன்சிகா நடித்துள்ளார் என்பதும் இந்த விளம்பர படத்தை இயக்கியதுகுறித்து நடிகை சுஜிதா தனது யூடியூப் சேனலில் தனது அனுபவங்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகாவுக்கு ஒருமுறை ஒரு காட்சியை சொல்லிக் கொடுத்தாலே போதும் அவர் உடனடியாக புரிந்து கொள்வார் என்றும் ஆனால் குழந்தைகளுடன் பணிபுரிந்தது மிகவும் ஜாலியாக இருந்தது என்றும் சுஜிதா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1983ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரம் முதல் பல கேரக்டர்களில் பல வருடங்கள் திரை உலகில் இருக்கும் சுஜிதா தற்போது இயக்குனராக மாறி உள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version