சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி பயோபிக்கிற்கு நடிகை வேட்டை நடக்கிறது!

Published

on

தமிழ்நாட்டில் மயிலாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி இந்தியளவில் பல மொழிகளில் நடித்து, மர்மமான முறையில் துபாய் ஹோட்டலில் பாத்டப்பில் விழுந்து இறந்தவர்.

இந்நிலையில், மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க கணவர் போனி கபூர் முடிவு செய்துள்ளார்.

அஜித்தை வைத்து பிங்க் படத்தின் ரீமேக்கை தயாரித்து வரும் போனி கபூர், அடுத்தபடியாக ஸ்ரீதேவியின் பயோபிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.

ஸ்ரீதேவியாக நடிக்க இந்தியளவில் நடிகை வேட்டை நடத்தி வருகிறாராம். அண்மையில் வெளியான என்.டி.ஆர் திரைப்படத்தில் ஸ்ரீதேவியாக நடித்திருந்த ரகுல் ப்ரீத் சிங், தேர்வாவாரா அல்லது வேறு எந்த நடிகை ஸ்ரீதேவி ரோலில் நடிக்க உள்ளார் என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version