சினிமா

உடல் எடை குறைத்து ஆளே மாறி!…அடடா இது நம்ம சினேகாவா?… வைரல் புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா. சுசி கணேசன் இயக்கிய ‘விரும்புகிறேன்’படத்தில் அறிமுகமாகி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி நடிகையாக மாறினார்.

விஜய், அஜித் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார். அதன்பின் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறினார் சினேகா.

மேலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் அண்ணி வேடங்களில் அவர் அசத்தி வருகிறார்.

இந்நிலையில், உடல் எடையை குறைத்து பல சினேகாவாக மாறி போஸ் கொடுத்த சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. பியூட்டி.. அழகி..என்றெல்லாம் அவரை கொஞ்சி வருகின்றனர்.

அதேநேரம், சினேகா உடல் எடையை குறைத்து இப்படி மாறியுள்ளாரா இல்லை பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளாரா என்பது தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். எனவே, உண்மையிலேயே அவர் இப்படி மாறிவிட்டாரா என்பது போக போக தெரிய வரும்.

seithichurul

Trending

Exit mobile version