டிவி

இனி 6 மணியா..? மீண்டும் போட்டோ ஷூட்டில் இறங்கிய நடிகை சிவானி நாராயணன்!

Published

on

இன்ஸ்டாகிராம் மூலம் புகழ் பெற்ற டிவி நடிகை சிவானி நாரயணன் விஜய் டிவி-யின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இன்னும் பிரபலமாகி உள்ளார்.

சிவானி மூன்று மாத காலம் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவருடைய இன்ஸ்டகிராம் தளத்தில் ஒரு புகைப்படம் கூட பதிவாகவே இல்லை. மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் தினமும் ஆள் வைத்து சமுக வலைதளங்களில் தொடர்ந்து வீட்டுக்குள் இருந்தாலும் புகைப்படங்கள் பதிவேறிக் கொண்டே தான் இருந்தன. ஆனால், சிவானி கடந்த மூன்று மாதங்களாகவே ஒரு போஸ்ட் கூட அவரது பக்கத்தில் வெளியாகவில்லை.

இந்த சூழலில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததில் இருந்து பேருக்கு ஒன்று இரண்டு பழைய போட்டோக்களை போஸ்ட் செய்து வந்தவர் இன்று மீண்டும் தனது போட்டோ ஷூட் பணிகளைத் தொடங்கி உள்ளார். வரிசையாக வழக்கம் போல் போட்டோக்களை ஷேர் செய்யவும் தொடங்கி உள்ளார் சிவானி. சிவானி இதுவரையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வந்ததில் இருந்து எந்தவொரு சீரியல், சினிமா என எதிலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version