தமிழ்நாடு

அரசியலில் குதித்தார் நடிகை ஷகிலா: எந்த கட்சியில் தெரியுமா?

Published

on

தமிழ் மற்றும் மலையாள நடிகையான ஷகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மலையாள திரையுலகில் பல கவர்ச்சி படங்களில் நடித்தவர் நடிகர் ஷகிலா. தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியில் இருந்து வருகிறார் என்பதும் கடந்த வாரம் தான் அவர் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக அவருடைய இமேஜே மாறிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் நடிகை ஷகிலா இணைந்துள்ளார். அவரை கட்சியின் நிர்வாகிகள் வரவேற்று அவருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்கள்.

வரும் தேர்தலில் அவர் பிரச்சாரத்திற்கு செல்வாரா? காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version