சினிமா செய்திகள்

தமிழ், மலையாள நடிகை கொரோனாவுக்கு பலி: முதல்வர் இரங்கல்!

Published

on

தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவர் புற்றுநோய் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

தமிழில் வெளியான ’பச்சை என்னும் காத்து’ என்ற திரைப்படத்திலும் ஒரு சில மலையாளப் படத்திலும் நடித்தவர் நடிகை சரண்யா சசி. 35 வயதான இவருக்கு இவர் தமிழ் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மலையாள திரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் திடீரென அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து ஒருசில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

சரண்யா சசியின் மருத்துவ செலவுக்கு மோகன்லால் உள்பட மலையாள நடிகர்கள் பலர் உதவி செய்தனர். இந்தநிலையில் சரண்யா சசியின் தாயாரும் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சரண்யா சசிக்கும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அவருக்கு கொரோனாவுக்கும் சேர்த்து சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். இதனை அவரது தோழியும் நடிகையுமான சீமா நாயர் என்பவர் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து சரண்யா சசியின் மறைவுக்கு தமிழ் மற்றும் கேரள திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் நடிகை சசி தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்த்துப் போராடினார். சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மிகவும அபாரம். கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நடிகை சசி தனது மருத்துவ செலவில்இருந்து ஒரு தொகையை மக்களுக்கு ஒதுக்கி உதவி செய்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version