சினிமா செய்திகள்

பிரபல நடிகையின் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

Published

on

பிரபல தமிழ் நடிகையின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

பிரபல தமிழ் திரையுலகின் குணசித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன். இவரது கணவர் பொன்வண்ணனும் நடிகர் மற்றும் இயக்குனர் என்பது தெரிந்ததே. இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய 2 மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களுக்கும், சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளுக்கும் ஆச்சரியத்தை அளித்தார். முதல்வர் ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி கனிமொழி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி ஆகியோர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வழக்கம்போல் மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை மணமக்களுக்கு திருமண பரிசாக கொடுத்து அனைவரின் கவனத்தை கவர்ந்தார். இந்த திருமணத்தில் முதல்வர் கலந்து கொண்ட புகைப்படங்களை தமிழச்சி தங்கபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவரள் சமீபத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார் என்பதும் தற்போது சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version