கேலரி

வாயில சிகரெட்…கையில் சீட்டுக்கட்டு… தாறுமாறான லுக்கில் ரேணிகுண்டா கதாநாயகி….

Published

on

விக்ரம் நடித்த காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. ஆனால், ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவரின் தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க மட்டுமே அவர் ஆர்வம் காட்டி வருகிறார். நந்தி, எத்தன், அலெக்ஸ் பாண்டியன் என சில படங்களில் நடித்தார். முத்தையா இயக்கத்தில் சசிக்குமார் நடித்து வெளியான கொடி வீரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், கையில் சீட்டுக்கட்டு, வாயில் சிகரெட் என ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதோடு, ஒரு கெட்டப்பழக்கம் எப்படி உங்களுக்கு நன்மையாக அமையும்?..சீக்கிரம் அதை விட்டு விடுங்கள். தற்போது ஒன்றும் தாமதமாகி விடவில்லை என அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அறிவுரை கூறுவதற்கு எதற்கு அவர் புகைப்பிடித்து போஸ் கொடுத்தார் என தெரியவில்லை. ஒருவேளை ஒரு புதிய படத்தில் இப்படி நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

 

 

seithichurul

Trending

Exit mobile version