சினிமா செய்திகள்

அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம் ஆடிய சமந்தா: வைரல் வீடியோ

Published

on

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது .

இந்த நிலையில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய திலிருந்து பிரபலமான சமந்தா தற்போது அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ஏராளமான பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக மற்றொரு நள்ளிரவு விமானம் … இல்லை!! இன்றிரவுக்கான ரிதம் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நேற்று இரவு அனிருத்தும் அரபிக்குத்து பாடலுக்கு தனது குழுவினருடன் நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version