சினிமா செய்திகள்

எனக்கும் பாலியல் தொல்லை இருந்தது: நடிகை சதா அதிர்ச்சி தகவல்!

Published

on

கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் எனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக நடிகை சதா தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் ’ஜெயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் அஜித் நடித்த திருப்பதி. ஷங்கர் இயக்கிய அன்னியன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சதா.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை சதா தனக்கும் திரையுலகில் பாலியல் தொல்லை இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தருவது குறித்த செய்திகளை அவ்வப்போது நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரடியாக எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. ஆனால் அதே நேரத்தில் போனில் என்னை தவறான முறையில் பேசுபவர்கள் ஒரு சிலர் இருந்தார்கள். அவ்வாறு பேசுபவர்களிடம் நான் போனை துண்டித்து விட்டேன்.

சினிமா என்பது ஒரு கிளாமர் துறை. அதில் அனைவரும் ஒரு அங்கமாக இருக்க விரும்புவார்கள். பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைவரும் சினிமாவுக்கு வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அதை தங்களுக்கு சாதகமாக தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறினார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version