இந்தியா

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகை ரோஜா சந்திப்பு: என்ன காரணம்?

Published

on

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ வும் நடிகையுமான ரோஜா சற்றுமுன் சந்தித்துள்ளார் .

தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா முதல்வரை சந்தித்து மரியாதை நிமித்தமானது என்றும் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே உள்ள ஒரு சில பிரச்சினைகள் குறித்து அவரிடம் கூறியுள்ளதாகவும் அந்தப் பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது தொகுதியில் உள்ள நெசவாளர்கள் உற்பத்தி செய்த பட்டு சால்வையை முதல்வருக்கு நடிகை ரோஜா அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுவை முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்துள்ள நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் எம்எல்ஏ வும் நடிகையுமான ரோஜா தமிழக முதல்வரை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version