இந்தியா

விமானத்தில் திடீர் கோளாறு: வழக்கு தொடர முடிவு செய்த நடிகை ரோஜா!

Published

on

நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா சென்ற விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டதை அடுத்து 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் விமான நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர நடிகை ரோஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது .

நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி செல்வதற்காக இன்டிகோ விமானத்தில் ஏறினார். அந்த விமானம் திருப்பதி சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக திருப்பதியில் தரை இறங்காமல் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி தரையிறக்கப்பட்ட பின்னரும் பயணிகளை நான்குமணி நேரமாக விமானத்திலிருந்து வெளியேற்றாமல் விமான நிலைய அதிகாரிகள் காக்க வைத்திருந்ததால் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டதால் ஒவ்வொரு பயணியும் ரூ.5000 பணம் கொடுத்தால் மட்டுமே பயணிகளை வெளியே அனுப்புவோம் என ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் விமானத்தில் பயணம் செய்த நடிகை ரோஜா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து இண்டிகோ விமான நிறுவனம் மீது அவர் வழக்கு தொடரவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. திருப்பதிக்கு செல்ல வேண்டிய விமானம் பெங்களூரில் தரையிறங்கியது மட்டுமன்றி கூடுதலாக 5,000 ரூபாய் பணம் கேட்ட விமான நிறுவனத்தின் மீது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version