சினிமா செய்திகள்

தளபதி யங், தல கிங்: அஜித், விஜய் குறித்து பிக்பாஸ் நடிகை

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரபல நடிகை ஒருவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்து கூறுகையில் தளபதியின் யங், தல கிங் என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் இவர் சமீபத்தில் நடித்த ’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவர் மூன்று படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் குறித்து தனது எண்ணத்தை பகிர்ந்துள்ளார். விஜய்யை தான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருவதாகவும், அவர் இன்றும் இளமையாக இருப்பதாகவும் கூறினார்.

அதேபோல் அஜித் தங்கள் வீட்டு குடும்ப விழா ஒன்றுக்கு வந்திருந்தார் என்றும் அப்போது அவர் அனைவரிடமும் நின்று நிதானமாக பேசி விட்டுச் சென்றதாகவும் கூறினார். மொத்தத்தில் இருவரையும் ஒரே வரியில் கூற வேண்டுமானால் தளபதி யங், தல கிங் என்று கூறினார்.

ரம்யா பாண்டியன் இந்த பதில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version