சினிமா செய்திகள்

ஃபார்முலா ஒன் கார் ரேஸ் பயிற்சியை முடித்த முதல் தமிழ் நடிகை இவர்தானா?

Published

on

உலகம் முழுவதும் பார்முலா ஒன் கார் ரேஸுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் இதில் மிகச் சிலரே திரையுலகைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்று உள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை அஜித் ஃபார்முலா ஒன் கார் ரேஸ் பயிற்சியை முடித்ததோடு போட்டிகளிலும் கலந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகை ஒருவர் பார்முலா ஒன் கார் ரேஸ் முதல்கட்ட பயிற்சி முடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர்தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.

தினேஷ் நடித்த ‘ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின் ’டிக் டிக் டிக்’, ‘சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். இவர் சமீபத்தில் பார்முலா 1 கார் பயிற்சிகளில் ஈடுபடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் தற்போது பயிற்சியை முடித்து சான்றிதழும் பெற்று விட்டதாக அறிவித்து உள்ளார்.

இந்த சான்றிதழுடன் கூடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலக நடிகைகளில் முதல் முறையாக பார்முலா ஒன் கார் ரேஸ் பயிற்சியை பெற்றுள்ளது நிவேதா பெத்துராஜ் தான் என்று கூறப்படுகிறது.

நிவேதா பெத்துராஜ் நடித்து முடித்துள்ள பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இரண்டு திரைப்படங்களில் நடிப்பதற்காக அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version