சினிமா செய்திகள்

நிக்கி கல்ராணிக்கு திருமணம் கன்பர்ம்: இந்த ஹீரோ தான் மாப்பிள்ளை!

Published

on

நடிகை நிக்கி கல்ராணிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு திரையுலகில் ஹீரோ தான் அவரது வருங்கால கணவர் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

‘டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன்பின் அவர் ஹர ஹர மகாதேவி, மொட்டசிவாகட்டசிவா, யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போதுகூட அவர் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றுவதாகவும் ஆதி வீட்டின் பல விசேஷங்களில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்துள்ள நிலையில் விரைவில் ஆதி-நிக்கி கல்ராணி திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுவதை அடுத்து ரசிகர்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version