சினிமா செய்திகள்

எதையும் வெட்டாதீர்கள் அல்லது எல்லாத்தையும் வெட்டுங்கள்: நடிகை நிகிலா விமல்

Published

on

வெட்டக் கூடாது என்றால் எதையும் வெட்டக் கூடாது என்றும் வெட்டலாம் என்றால் எல்லாத்தையும் வெட்டலாம் என்றும் நடிகை நிகிலா விமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பசுவை வெட்டக்கூடாது என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வரும் நிலையில் இது குறித்த கேள்விக்கு நடிகை நிகிலா விமல் பதிலளித்துள்ளார்.

நம் ஊரில் பசுமை வெட்டக்கூடாது ஆனால் மற்ற விலங்குகளை வெட்டலாம் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர். வெட்டக்கூடாது என்றால் எந்த விலங்கையும் வெட்ட கூடாது வெட்டலாம் என்றால் எல்லா விலங்குகளையும் வெட்டலாம் என்பதுதான் என்னுடைய கருத்து கூறியுள்ளார்.

கோழி, ஆடு, மீன்கள் மட்டும் உயிர் இல்லையா? அதை வெட்டி சாப்பிடலாம் பசுவை மட்டும் வெட்ட கூடாது என்பது என்ன நியாயம்? என்று நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version