சினிமா செய்திகள்

காண்டம் விளம்பரத்தை பகிர்ந்த சிம்புவின் வருங்கால மனைவி? வீடியோ வைரல்!

Published

on

சிம்புவின் வருங்கால மனைவி என்று கூறப்படும் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண்டம் விளம்பரத்தை பகிர்ந்துள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இவர் சிம்புவை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஒரு வதந்தி உலா வருகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் தனது பக்கத்தில் காண்டம் விளம்பர வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த விளம்பரத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவர் அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். சிம்புவுக்கு மனைவியாகப் போகிறவர் பணத்திற்காக காண்டம் விளம்பரத்தை பதிவு செய்வதா என்ற பாணியில் பல கமெண்ட்ஸ்கள் உள்ளன. இருப்பினும் காண்டம் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்லதுதான் என்று நிதி அகர்வாலுக்கு ஆதரவாகவும் சில கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version