சினிமா செய்திகள்

கர்ப்பமான வயிறு, கணவருடன் போட்டோஷூட் எடுத்த நமீதா: வைரல் புகைப்படங்கள்

Published

on

சமீபத்தில் நடிகை நமீதா தனது பிறந்த நாளன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த கையோடு கர்ப்பமாக இருப்பது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் தற்போது கணவர் மற்றும் கர்ப்பமான வயிறுடன் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் அஜித் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் அவர் வீரேந்திரா என்பவரை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திடீரென அரசியலில் ஈடுபட்ட நமீதா தற்போது சினிமா, அரசியல் இரண்டையும் விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version