சினிமா செய்திகள்

நடிகை மியா ஜார்ஜ் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்!

Published

on

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த மியா ஜார்ஜ் அவர்களின் தந்தை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த மியாஜார்ஜ், தமிழில் அமர காவியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் ஆகிய படங்களில் நடித்து வந்த மியா ஜார்ஜ் தற்போது ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘கோப்ரா’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மியா ஜார்ஜ், கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நடிகை மியா ஜார்ஜ் தந்தை ஜார்ஜ் ஜோசப் என்பவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறுதி சடங்கு இன்று கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மறைந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கு மினி என்ற மனைவியும் மியா, கினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version