சினிமா செய்திகள்

நடிகை கஸ்தூரி கர்ப்பமா? டுவிட் ஏற்படுத்திய குழப்பம்

Published

on

நடிகை கஸ்தூரி கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து #mrPREGNANT என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளதால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர் .

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அரசியல் விளையாட்டு சினிமா உள்பட பல துறைகளில் உள்ள விஷயங்களை தைரியமாக கருத்துக்களை முன் வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சட்ட முன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்து #mrPREGNANT என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் கஸ்தூரி கர்ப்பமாகி விட்டாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர் .

இன்று ஏப்ரல் ஒன்று என்பதால் முட்டாள்கள் தின பதிவாக இருக்கும் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். மேலும் ஒரு வேளை கர்ப்பிணி வேடத்தில் திரைப்படம் அல்லது சீரியலில் கஸ்தூரி நடித்து வரலாம் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இதற்கு கஸ்தூரி விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை கஸ்தூரி கடந்த 2000ம் ஆண்டு ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version