சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

Published

on

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பம் ஆன காஜல்அகர்வால் அவ்வப்போது தனது கர்ப்பம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை காஜல் அகர்வால் அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை அடுத்து தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version