சினிமா செய்திகள்

காணாமல் போன ரஜினி பட நடிகையின் வைரத்தோடு.. கண்டுபிடித்துக் கொடுத்தால் சன்மானம்!

Published

on

ரஜினிகாந்த் நடிப்பில் தமிழில் வெளியான பருவராகம் மற்றும் நாட்டுக்கு ஒரு நல்லவன் படங்களில் நடித்தவர் ஜூஹி சாவ்லா. தமிழ் மட்டுமல்லாமல் நிறைய பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

டிசம்பர் 13-ம் தேதி மும்பை சர்வதேச விமான நிலையம் என்ற ஜூஹி சாவ்லா, கவுண்ட்டர் செக்கிங் முடித்த பிறகு, பாதுகாப்பு சோதனைக்காகக் காத்து இருந்துள்ளார். அப்போது அவரது காதிலிருந்து வைரத்தோடு காணாமல் போயுள்ளது.

அது குறித்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஜூஹி சாவ்லா, அந்த வைரத்தோடை தான் 15 வருடங்களாக அணிந்து வந்தேன். அது எனக்கு ராசியான தோடு. அதை கண்டு பிடிப்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதை சமர்ப்பித்தால், தகுந்த சன்மானம் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்,

அந்த தொடு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளத் தனது காதில் உள்ள மற்றொரு தொடை படமாக எடுத்துக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version