சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக நுழைந்த விஜய், தனுஷ், சிம்பு நாயகி!

Published

on

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வர உள்ளது. நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இதற்கு முந்திய சீசன்களில் கலந்து கொண்டவர்கள், இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புரமோ வீடியோவில் விஜய், சிம்பு, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஹன்சிகா வந்துள்ளார். அவர் நடித்த ‘MY 3’ என்ற வெப்சீரிஸ் புரமோஷனுக்காகவும் பிக் பாஸ் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தவும் அவர் உள்ளே வந்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Trending

Exit mobile version