தமிழ்நாடு

தொகுதி ஒதுக்கீடு முடியாததால் தனித்தனியாக பிரச்சாரம் செய்யும் அதிமுக-பாஜக!

Published

on

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாஜக கொடுத்த பட்டியலில் உள்ள தொகுதிககளில் பாஜக தனியாகப் பிரச்சாரம் செய்து வருகிறது

அதே தொகுதிகள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் அதிமுகவும் தனியாகப் பிரச்சாரம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்று அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளதால் நாளை முதல் அதிமுக மற்றும் பாஜக இணைந்து பிரச்சாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை கெளதமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு பாஜகவினர் தற்போது தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். நடிகை கெளதமி ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும் தெலுங்கு பேசும் மக்கள் ராஜபாளையத்தில் அதிகம் என்பதும் அவருடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறுகின்றனர்

அதேசமயம் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இங்கே போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுகவினரும் இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version