தமிழ்நாடு

எல்.முருகனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த கெளதமி: 10 கிமீ வேன் ஓட்டினார்!

Published

on

பாஜக தமிழக தலைவர் எல் முருகன் போட்டியிடும் தாராபுரம் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்ய வந்த நடிகை கௌதமி சுமார் பத்து கிலோமீட்டர் அவரே பிரச்சார வேன் ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை கௌதமி தமிழகம் மற்றும் புதுவையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தாராபுரம் பகுதியில் எல்.முருகனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். திறந்த வேனில் நின்றவாறு நடிகை கவுதமி பிரச்சாரம் செய்தபோது இரட்டை இலை தான் இன்று தாமரையாக மலர்ந்தது என்றும், ஆதலால் முருகனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி தொடர வேண்டும் என்றால் பெண்களை மதிக்கும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் திமுகவினர் பெண்களையும் பெண்ணின் உரிமையையும் கொச்சைப்படுத்தி வருவதாகவும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் உள்பட திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பெண்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்கள் என்றும் அதனால் அவர்களை புறக்கணித்துவிட்டு பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாஜகவுக்கு வாக்களித்தால் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் தமிழகம் ஒளிமயமான எதிர்காலம் ஆக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தபோது சுமார் பத்து கிலோமீட்டர் அவரே வேனை ஓட்டி வந்தார் என்பதும் வேனை ஆங்காங்கே நிறுத்தி வாக்காளர்களை கையெடுத்து கும்பிட்டு வாக்கு சேகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version