சினிமா

இனிமேலாவது திருந்துங்கப்பா!..உருவ கேலியை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை(வீடியோ)….

Published

on

சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளில் உருவக்கேலி என்பது அதிகரித்து வருகிறது.

விஜய் டிவியில் பல காமெடி காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிகவும் பிரபலமாகி வருபவர் நடிகை தீபா. வெகுளியான பேச்சு மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரை மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் கிராமத்து கதைகளில் அம்மா மற்றும் அக்கா வேடங்களில் அசத்தி வருபவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவரின் உருவத்தை கிண்டல் செய்யும்படி காமெடியன் பேச உருவக்கேலி செய்ய அவரை வெளுத்து வாங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால், அதேநேரம், அது ஒரு ஸ்கிரிப்ட் என்பது பின்னர் தெரியவந்தது. ஆனாலும், ஒரு நல்ல கருத்தை கூறிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version