சினிமா

நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் புகார்!

Published

on

கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் நடிப்பில் வெளியான நிபுணன் படத்தில் நடித்தபோது, நடிகர் அர்ஜுன் தன்னை மிகவும் தவறுதலாக தொட்டதாகவும், அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், #MeTooவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில், 3 பக்கத்துக்கு நீண்ட ஒரு அறிக்கையை நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வெளியிட்டுள்ளார். அதில், நிபுணன் படத்தில் நான் அவரது மனைவியாக நடித்தேன். படப்பிடிப்பின் போது, இயக்குநர் சொல்வதற்கு முன்னதாகவே என்னை இருக கட்டிப்பிடித்து, முதுகில் மேலும், கீழும் கை வைத்து உரசினார். நான் அதிர்ந்து போனேன். பின்னர், இயக்குநரை அழைத்து இந்த சீனை வைத்து விடுங்கள் என்றார்.

மேலும், கணவன் மனைவியாக நடிக்கின்றோம், நமக்குள் கெமிஸ்ட்ரி ஒத்துப்போக வேண்டும், அதற்காக தனியாக ரிஹர்சல் செய்ய வா என அழைத்தார். நான் மேக்கப் டீம் மற்றும் இயக்குநரிடமும் ஷூட்டிங்கிற்கு மட்டும் வருகிறேன். ரிஹர்சல் வேண்டாம் என மறுத்துவிட்டேன் என்றுள்ளார்.

நான் அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால், தமிழ் சினிமாவில் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காத வண்ணம் செய்துவிட்டார் எனவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை நடிகர் அர்ஜுன் மறுத்துள்ளார். மேலும், இதுபோன்ற பொய் புகார்களால் #MeToo தனது வலிமையை இழந்து விடும் என்றும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version