உலகம்

அமெரிக்க குடிமகளாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்: பிரபல நடிகை பேட்டி!

Published

on

அமெரிக்க குடிமக்களாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஹாலிவுட் பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் இருந்து வந்ததை அடுத்து தாலிபான்கள் முன்னேற முடியாமல் தவித்தனர். ஆனால் அமெரிக்கப் படைகள் தற்போது படிப்படியாக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே வாரத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி விட்டனர்.

இது குறித்து பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி கூறியபோது ’கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்க ராணுவ உதவி செய்து பல லட்சம் கோடிகளை செலவழித்தது. ஆனால் இருபது வருடங்களுக்கு பிறகு படைகள் வாபஸ் பெற்ற சில தினங்களில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர், ஆப்கன் மக்களை அம்போவென விட்டுவிட்டு அமெரிக்க படைகள் இவ்வளவு அவசரமாக வெளியேறி இருக்க கூடாது என்று கூறியுள்ளார்

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருந்தாலும் இந்த போர் இப்படி முடிந்து இருக்கக்கூடாது என்பதே என்னுடைய எண்ணம். சமாதான பேச்சுவார்த்தை பேசும்போது தாலிபான்களுக்கு ஆதரவாக அமெரிக்கா நடந்து கொண்டது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. தன்னை நம்பிய ஆப்கானிஸ்தான் அரசுக்கு இப்படி பாதியில் கைவிட்டது மிகப்பெரிய துரோகம். இதை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. ஒரு அமெரிக்க குடிமகளாக இதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் அமெரிக்கா போர் தொடுத்த பின்னர் ஈராக் நாசமானது போல், அமெரிக்கப் படைகளின் ஆதிக்கத்தில் ஆப்கான் நாசமானது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version