சினிமா செய்திகள்

மாணவியை தத்தெடுத்த நடிகை, எம்.எல்.ஏ ரோஜா..!- நெட்டிசன்கள் பாராட்டு

Published

on

நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏ-வுமான ரோஜா செல்வமணி இன்று மாணவி ஒருவரைத் தத்தெடுத்துள்ளார்.

ஆந்திராவில் முதல் அமைச்சராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவி ஒருவரை தத்தெடுத்துள்ளார் ரோஜா. ஜெகன் மோகன் ரெட்டியின் அரசின் கீழ்தான் ரோஜா செல்வமணி எம்.எல்.ஏ ஆக உள்ளார். அவரது பிறந்தநாளை ஒட்டி மாணவியை தத்தடுத்த ரோஜா, மாணவிக்கான முழு செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.

தத்தெடுக்கப்பட்ட மாணவி சமீபத்தில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த மாணவியின் கல்வி, மேல்படிப்பு, இருப்பிடம், உணவு என அத்தனைக்குமான செலவுகளையும் ரோஜா இனி வரும் காலங்களில் மேற்கொள்ள உள்ளார். ரோஜா-வின் கணவர் இயக்குநர் செல்வமணி தற்போது தமிழக ஃபெப்சி தலைவராக உள்ளார்.

Trending

Exit mobile version