சினிமா செய்திகள்

‘என் வெற்றிக்கு ஜெயலலிதா அம்மாவும் ஒரு காரணம்’- மனம் திறந்த நடிகை, எம்எல்ஏ ரோஜா..!

Published

on

‘என் வெற்றிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவும் ஒரு காரணம்’ என நடிகையும் எம்.எல்.ஏ-வுமான ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அழகுக்கலை நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரோஜா. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, “ஆரம்ப காலகட்டத்தில் நான் கறுப்பு நிறத்தில் இருப்பதால் சினிமாவில் தோற்றுப் போய்விடுவேன் எனப் பலரும் ஆருடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், எனக்கு நடிப்புத் திறமை இருந்தது. மக்களுக்காக மேக் அப் போட்டு என்னை மக்கள் மனதில் நிலைக்கச் செய்தவர்கள் என்னுடன் பணியாற்றிய மேக் அப் கலைஞர்கள்.

அவர்கள் இல்லையென்றால் இன்று நான் இல்லை. எனது நடிப்புக்கான சினிமாத் துறையில் மட்டுமல்லாது எனது அரசியல் பயணத்திலும் எனக்கான மிகப்பெரிய ரோல் மாடல் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா தான். என்னுடையை வெற்றியைக் கூட அவருக்குத் தான் நான் கொடுப்பேன். அவரிடம் இருந்து தான் தைரியத்தையும் துணிச்சலையும் கற்றுக் கொண்டேந்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version