Connect with us

சினிமா

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக களத்தில் புதிய அணி!

Published

on

விரைவில் வர உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக புதிய அணி ஒன்று களமிறங்க தயாராகி வருகிறது.

கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக மல்லுக்கட்டிய விஷால் அணி வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்ததையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் மூலம் ஒரு தலைவர், இரண்டு உப தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், 24 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் விஷால் அணி சார்பில், நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். மீதமுள்ள பதவிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ள நிலையில் அதே பதவிக்கு விஷால் மீது அதிருப்தியில் உள்ள ஆர்.கே.சுரேஷ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் விஷாலுக்கு எதிராக தங்கள் அணி சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளதாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

வரும் 23-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!