இந்தியா

காங்கிரஸ் கட்சியை நோக்கி படையெடுக்கும் நடிகர்கள்: என்ன காரணம்?

Published

on

தமிழகத்தில் நடிகர் நடிகைகள் அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுவது சாதாரணமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி நடிகர்-நடிகைகள் தமிழகத்தின் முதல்வராகவும் எம்எல்ஏ, எம்பி ஆகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் அதிக அளவு நடிகர்-நடிகைகள் அரசியலில் ஈடுபடுவது கிடையாது. பிரேம் நசீர், சுரேஷ் கோபி உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென காங்கிரஸ் கட்சியில் நடிகர் நடிகைகள் அதிகளவு இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் மேஜர் ரவி என்ற இயக்குனர் இணைந்தார். பாஜக ஆதரவாளராக இருந்த இவர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இயக்குனர் ரமேஷ் பிஷாரிடி, கேரள நடிகர் சங்கத்தின் தலைவரான எடவேலா பாபு ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் திடீரென இணைந்துள்ளனர். மேலும் காமெடி நடிகர் தர்மஜன் போல்காட்டி என்பவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பதும் இவர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. அங்கு தற்போது கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் அடுத்தது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் காங்கிரஸ் கட்சியை நோக்கி நடிகர்-நடிகைகள் படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version