சினிமா செய்திகள்

ஜூனியர் யோகி பாபு அவதரித்து விட்டார்.. ரசிகர்கள் ஹேப்பி

Published

on

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள யோகி பாபு, கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சு பார்கவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் யாருக்கும் தெரியாமல் யோகி பாபுவின் குலதெய்வ கோயிலில் வைத்து நடந்தது.

இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் அடுத்தடுத்த வைபவங்களும் அதிக கூட்டமில்லாமல் நடைபெற்றன. இந்த நிலையில், தற்போது யோகி பாபுவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

முன்னதாக யோகி பாபு சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்துகொண்டது பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு அவர் மார்ச் மாதம் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குள்ளாக கொரோனா பரவல் ஊடுருவி வேலையை காட்டத் தொடங்கியது.

seithichurul

Trending

Exit mobile version