சினிமா செய்திகள்

தன்னை ‘கூத்தாடி’ என்று ட்ரோல் செய்தவருக்கு நடிகர் விவேக் கொடுத்த மாஸ் ரிப்ளை!

Published

on

ட்விட்டரில் தன்னை ‘கூத்தாடி’ என்று ட்ரோல் செய்தவருக்கு நடிகர் விவேக் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று விவேக், விவேகானந்தர் மாணவர்களுக்கு சொன்ன ஒரு கருத்து குறித்து, ட்விட்டரில் பதிவிட்டு, “மாணவர்களுக்காக இவ்வாறு கூறுகிறார் விவேகானந்தர்!!” எனக் கூறியிருந்தார். அதற்கு ஒருவர், “அவர் சொன்ன இத படிக்கமாட்டான்க. தல, விஜய் அப்படின்னு உருளுவான்க விவேக்” என்று போஸ்டுக்குக் கீழ் ரிப்ளை செய்தார்.

அதற்கு கீழ் வந்த இன்னொருவர், “ஆமா கூத்தாடிங்க மக்கள அப்படி ஆக்கி வச்சுருக்காங்க… என்ன விவேக்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு விவேக், “கூத்தாடின்னு சொல்லீட்டு ஏன் சார் எங்க குடும்ப கூத்தாடிய profile dp யா வச்சிருக்கீங்க? கலைஞர்களை கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை. பெருமைதான்! அந்த சிவனே மன்றில் ஆடுவது கூத்து தானே!” என்று பதிலடி கொடுத்துள்ளார். விவேக்கின் இந்த மாஸ் ரிப்ளை பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. விவேக்கை ட்ரோல் செய்த நபர், நடிகர் வடிவேலுவின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version