தமிழ்நாடு

கோடி நன்றிகள் அண்ணா: முதல்வருக்கு நடிகர் விவேக் மனைவி நன்றி.

Published

on

முதல்வர் அண்ணாவுக்கு கோடி நன்றிகள் என மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி தெரிவித்துள்ளார்

விவேக் வாழ்ந்த வீடு சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என சமீபத்தில் பெயர் சூட்டப்பட்டது. இது குறித்த கோரிக்கை ஒன்றை தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விவேக்கின் மனைவி அருள்செல்வி வழங்கிய நிலையில் ஒரு சில நாட்களில் அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது

இந்த நிலையில் சின்ன கலைவாணர் விவேக் சாலை என்ற பெயர் பலகை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நன்றியுரை வழங்கிய விவேக்கின் மனைவி அருள் லட்சுமி கூறியதாவது:

இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது குடும்பம் சார்பாகவும், இந்த பத்மாவதி நகரில் வசிக்கும் ஒவ்வொரு பிரஜையின் சார்பாகவும், எனது கணவரின் நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவரின் சார்பாகவும், திரைத்துறையில் இருக்கும் அனைத்து சங்கங்களின் சார்பாகவும் மற்றும் உலகமெங்கும் இருக்கும் அவரது ரசிகர்கள் அனைவரும் சார்பாகவும் நான் நமது மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கோடி நன்றிகள் அண்ணா என்று தனது உரையை முதல் மனைவி அருள்செல்வி முடித்துக்கொண்டார்

 

seithichurul

Trending

Exit mobile version