தமிழ்நாடு

நடிகர் விவேக் கவலைக்கிடம் – மருத்துவமனை அதிர்ச்சி அறிக்கை!!

Published

on

திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடிகர் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நடிகர் பத்மஸ்ரீ விவேக், இன்று காலை 11 மணிக்கு மயக்கமான நிலையில் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டார். அவரை மருத்துவர்கள் உடனடியாக அவசர வார்டில் வைத்து சிகிச்சை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனரி ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ கருவியின் உதவியுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். 

இது ஒரு நெஞ்சு வலி சம்பந்தப்பட்ட பாதிப்பு. இதற்கும் கொரோனா தடுப்பூசி மருந்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

seithichurul

Trending

Exit mobile version