சினிமா செய்திகள்

நடிகர் விவேக் காலமானார்: கோலிவுட் திரையுலகினர் இரங்கல்!

Published

on

பிரபல காமெடி நடிகர் விவேக் நேற்று உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் விவேக் நேற்று காலை 11 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக ஏற்கனவே நேற்று மாலை மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:35 மணிக்கு காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி கோலிவுட் திரை உலகையே உலுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகரும் தலைசிறந்த சமூக சேவகருமான நடிகர் விவேக் ஒரு லட்சம் மரங்களை நட வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தவர் என்பதும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சீடராகவும், உண்மை தொண்டனாகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக்கின் மறைவிற்கு கோலிவுட் திரையுலகின்ர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version