சினிமா செய்திகள்
நகைச்சுவை நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சை
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சற்று முன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
காமெடி நடிகர் விவேக் அவர்களுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விவேக் நேற்றுதான் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செய்துகொண்ட மறு நாளே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விவேக் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.