சினிமா செய்திகள்

இறந்த பின்னரும் நடிக்கும் நடிகர் விவேக்: இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி செய்த டெக்னிக்!

Published

on

சரவணா ஸ்டோர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டு விரைவில் படப்பிடிப்பை முடிக்கவுள்ள படக்குழுவினர்களுக்கு தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தில் லெஜெண்ட் சரவணன் உடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் விவேக். அவருடைய நண்பராக இந்த படத்தில் நடித்ததாகவும் கிட்டத்தட்ட படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வரும் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென விவேக் மறைந்து விட்டதால் அவருடைய காட்சிகளை என்ன செய்வது என்றும், மீண்டும் முதலில் இருந்து திரும்ப எடுப்பதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த குழப்பத்திற்கு இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் ஒரு தீர்வை கண்டுள்ளனர்.

கோவையில் உள்ள ஒரு கோவை பாபு என்பவர் கிட்டத்தட்ட விவேக் போலவே இருப்பார் என்பதும் விவேக் போலவே மேனரிசம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரை வைத்து மீதி படத்தை முடித்துவிடலாம் என்று இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி முடிவு செய்துள்ளனர்.

மேலும் விவேக் செய்யவேண்டிய டப்பிங் பணியையும் மிமிக்ரி கலைஞர்களை வைத்து செய்துவிடலாம் என்றும் படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தில் இறந்த பின்னரும் விவேக்கை நடிக்க வைக்கும் டெக்னிக்கை இயக்குனர் ஜேடி-ஜெர்ரி முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version