சினிமா செய்திகள்

மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??

Published

on

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், தான் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் பரபரப்பு சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் தமிழ்நாடு சார்பில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவர் விஷ்ணு விஷால். சினிமாவுக்கு வந்து சாதித்ததால் கிரிக்கெட் வாழ்க்கையை கைவிட்டார். தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களில் நடித்த விஷ்ணு விஷாலுக்கு கடைசியாக ‘ராட்சசன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதிலிருந்து பல்வேறு படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் விஷ்ணு விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கை மோசமாகவே இருந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதையடுத்து பிரபல பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் காதலில் விழுந்தார் விஷ்ணு. இருவருக்கும் 2020 ஆம் ஆண்டு எங்கேஜ்மென்ட் முடிந்துள்ளது.

சொந்த வாழ்க்கைப் பிரச்சனை காரணமாக நடுவில் சில ஆண்டுகள் குடி போதைக்கு அடிமையாகியுள்ளார் விஷ்ணு. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து தன் உடலை ரெடி செய்து, சினிமாவிலும் ஜெயித்துக் காட்டினார்.

இந்நிலையில் தற்போது அவர் குறித்தான இன்னொருப் பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. சென்னை, கோட்டூர்புரத்தில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் விஷ்ணு. அங்கு அவர் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அடுக்கு மாடி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் காவல் துறைக்குப் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அடுக்கு மாடி குடியிருப்புக்குச் சென்ற போலீஸ், விஷ்ணுவிடம் விசாரணை நடத்தியுள்ளது. அப்போது விஷ்ணு போலீஸிடமும், குடியிருப்பைச் சேர்ந்தவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் விஷ்ணு, தன் ட்விட்டர் பக்கத்தில், ‘நீங்கள் தினமும் மது அருந்திக் கொண்டிருந்தால், 6 பேக் என்பது உடனடியாக வந்து விடாது. மிகத் தீவிரமான டயட் மற்றும் மது குடிக்காமல் வெகு நாட்கள் இருக்க வேண்டும். இந்த லாஜிக் சிலருக்குப் புரியாது’ என்று நடந்த சம்பவத்துக்கு சூசகமாக விளக்கம் கொடுத்துள்ளார். இந்தப் பிரச்சனை குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version