சினிமா செய்திகள்

கேலி செய்து மீம்ஸ் போட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு: பிரபல நடிகர் எச்சரிக்கை!

Published

on

தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தை பற்றியோ கேலி செய்து மீம்ஸ் போட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தான் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை பொருத்தவரை நாகார்ஜுனன் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம், மோகன்பாபு குடும்பம், பாலகிருஷ்ணா குடும்பம், மகேஷ்பாபு குடும்பம் என ஐந்து குடும்பங்கள் தான் ஒட்டு மொத்த தெலுங்கு சினிமாவை கட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் கூட மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோகன் பாபு நடித்த ’சன் ஆப் இந்தியா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இது குறித்து மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு கூறியபோது ’ஜாலியாக எடுக்கக்கூடிய மீம்ஸ்களை நாங்களும் ஜாலியாக எடுத்துக் கொள்வோம். ஆனால் எங்கள் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்யும் வகையில் மீம்ஸ்கள் வெளியிட்டால் பொறுத்துக்கொள்ள முடியாது. அந்த வகையான மீம்ஸ் கிரியேட் செய்பவர்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version