சினிமா செய்திகள்

மீண்டும் வில்லன் ஆன நடிகர் விஜய் சேதிபதி… ‘உப்பென்னா’ போஸ்டர் வெளியீடு!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி தனது அடுத்த படம் ஒன்றிலும் வில்லன் ஆக கமிட் ஆகியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். நான்கு மொழிப் படங்களில் தொடர்ந்து மாறி மாறி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தெலுங்கு சினிமா சயிரா நரசிம்மா ரெட்டி படம் மூலம் அறிமுகம் ஆன விஜய் சேதுபதி தற்போது உப்பென்னா என்னும் தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

உப்பென்னா என்னும் படத்தில் தனது மாஸான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டும் நடிப்பேன் என இல்லாமல் கதைக்கான நாயகன் ஆக எந்த மொழி, எந்த கதாபாத்திரம் என்றாலும் நடிக்கத் தயாராக இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வகையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த உப்பென்னா பட போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதிக்கு சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. அடுத்தடுத்து தமிழில் துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், பெயர் அறிவிக்கப்படாத ஒரு படம் எனப் பல படங்கள் வெளியீட்டுக்கு வர உள்ளன. இதுபோக அரை டஜன் படங்களில் கெளரவ தோற்றத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

Trending

Exit mobile version